Sunday, September 18, 2016

வேதம் கண்ட விஞ்ஞானம் 05
எல்லாம் வல்ல இறைவன் ஸ்ரீகிருஸ்ணரை வணங்கி வேதம் கண்ட விஞ்ஞானம் பாகம் 5இனை எழுதுகின்றோம். கடந்த 4ம் பகுதிக்கு ஆதரவும் வாழ்த்துக்களையும் அளித்த பெருமக்களுக்கு முதற்கண் நன்றிகள் உரித்தாகட்டும்.

4ம் பதிவை படிக்க 

https://www.facebook.com/photo.php?fbid=617537994936578&set=a.575649839125394.1073741828.575646049125773&type=1&theater

சென்ற பதிவுகளில் வானியல் மற்றும் மருத்துவம் சார்ந்த வேத வசனங்களையும் அவற்றின் அறிவியல் அணுகுமுறைகளையும் வேதகாலத்தில் வாழ்ந்த சனாதன தர்மம் சார்ந்த மகாரிஷிகளின் பிரமாண்ட வெளிப்பாடுகள் பற்றியும் விரிவாக தந்து இருந்தோம்..அந்த வகையில் இன்று வேதம் கண்ட விஞ்ஞானம் பகுதி 5இல் அறிவியலின் பௌதீகவியலுடன் வேதங்கள் எந்த அளவுக்கு ஒத்து போகின்றன என்பது குறித்து பார்க்க இருக்கின்றோம்..

பௌதீகவியல் என்பது விஞ்ஞானத்தின் அத்திவார என்று கூட கூறலாம்..இன்னும் லட்சக்கணக்கான விடயங்களுக்கு விடைதெரியாத பகுதியே பௌதீகவியல்..அதிலும் ஒளி,மற்றும் போட்டோன்கள் என்பது தொடர்பான ஆராய்வுகள் மிகவும் முக்கியமானவை.

அந்த வகையில் இன்றைய வேதம் கண்ட விஞ்ஞானம் பௌதீகவியல் தொடர்பாக ஆராய உள்ளது..


ஒளியின் வேகம் தொடர்பாக 20ம் நூற்றாண்டில் மேலை நாட்டு விஞ்ஞானிகள் ஒளியின் வேகத்தை கண்டறிந்தனர்..ஆனால் இற்றைக்கு 3395 வருடங்களுக்கு முன்பே மகாரிஷி சயனக்கார்ய என்பவர் இதை துல்லியமாக கணித்துக்கூறியுள்ளார்..

வேதங்களுக்கான விளக்கவுரையை எழுதும் போது குறித்தசுலோகத்திற்கான விளக்கத்தில் இதைகூறி உள்ளார்..


தரணிர் விஸ்வதர்சடோ ஜோதிஸ்க்ர்தாஸி
சூரியா விஸ்வாம பாசி ரோகணம்
ரிக் வேதம் 1504

மேற்சொன்ன வேத வசனத்திற்கு விளக்கவுரை கூரும் போதே மகாரிஷி சயனகார இந்த ஒளியின் வேகத்தை கணித்து கூறியுள்ளார்..

"யோஜனானாம் சகஸ்ரம் தேவ் சதே தேவ் யோஜனே
ஏக்னா நிமிஷார்தேனா கிரமமனா நமோஸ் துதி"

என்னும் சுலோகம் மூலம் ஒளியின் வேகம் குறித்துகாட்டப்பட்டது...அதன் படி கணக்கிட்ட வேகமும் நவீன விஞ்ஞானம் கூறிய வேகமும் சரியாக காணப்பட்டது என்பதே ஆச்சரியத்தின் உச்சம்..

மேற்கொண்ட உண்மையை 1890 மார்க் முல்லர் என்பவரால் தொகுக்கப்பட்ட ரிக் வேதத்திலும் காணக்கூடியதாக உள்ளது....வேதங்களை மொழிபெயர்க்கும் பணிக்கு இவர் சாய்னா பாஷ்யத்தை ஆதாரமாக கொண்டார்..சாய்னா கர்யா என்பவரின் விளக்கவுரை கை எழுத்துப்பிரதி(கி.மு 1395) பற்றி .முல்லர் குறிப்பிட்டு உள்ளார்

குறிப்பு-அர்த்த சாஸ்திரத்தின் படி யோஜனா என்பது 9.11 மைல்களுக்கு சமன்..அது 8000 தனுசுகளுக்கு சமன்.ஒரு தனுசு என்பது சராசரிமனித உயரத்துக்கு சமன்.அதாவது 6 அடிக்கு சமன்.

வரலாறு என்ற ஒன்று உண்டு.அதில் நிஜங்கள் மட்டுமே நிலைத்திருக்கும். டாக்டர் டேவிட் எட்வின் பின்கிரீ என்ற அமெரிக்க கணிதப்பேராசிரியர் 1952 ஆம் வருடம் தற்செயலாக ரோம் நகரில் உள்ள நூலகத்தில் ஒரு புத்தகத்தைப்பார்த்தார்.அதில் ஒரு ஹிந்து வான சாஸ்திர அறிஞரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.அந்த புத்தகத்தில் கூறப்பட்டிருந்த வானியல் உண்மைகளைப்பார்த்து வியந்துபோனார். அதனால் அவர் அன்று முதல் தனது ஆராய்ச்சியை ஹிந்து கணிதம்,வான சாஸ்திரம் நோக்கித் திருப்பினார்.
கி.பி.1965 ஆம் ஆண்டு நமது பாரதத்திற்கு வந்தார்.இத்துறையில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட 20,000 கிரந்தங்கள்(பாடல்கள்)உள்ளன என்று கணக்கிட்டு அவற்றின் விவரத்தைத் தொகுக்கத்தொடங்கினார்.கி.பி.1995 வரை ஐந்து பெரிய தொகுப்புகளாக அவற்றை வெளியிட்டார்.அவற்றிற்கு Census of Exact Science எனப் பெயரிட்டார்.

அடுத்ததாக இந்தியர்களின் கால அளவீடுகளின் விஞ்ஞானம் பிரமிப்பின் உச்சம்.....பூமி தன்னைத்தானே 1600 கிலோமீற்றர் வேகத்தில் சுற்றுகின்றது..இந்த வேகத்தில் தன்னைத்தானே 24 மணிநேரம் சுற்றுகின்றது..இப்படி சுற்றுவதால் 12 மணி நேரம் பகலாகவும் 12 மணிநேரம் இரவாகவும் கருதப்படுகின்றது..

இந்தியகால அளவுப்படி ஒரு நாள் என்பது 24 ஓரைகளை கொண்டது.ஓரை என்ற சமஸ்கிருத நாளடைவில் மருவி ஆங்கிலத்தில் ஹவர் (hour) என்றும் புருத்விடிவாஸ் என்றும் ஓரோ என்ரும் அழைக்கப்படுகின்றது..

இது போக வெள்ளொளி என்னும் கருத்தை குறித்தும் வேதங்கள் அழகான முறையில் விவரணம் செய்கின்றது...வெள்ளொளி என்பதில் 7 நிறங்கள் உண்டு என்கிறது நவீன விஞ்ஞானம்,அதையே நம் வேதங்களும் கூறுகின்றது...சூரியன் 7 தேர் பூட்டி தன் ரதத்தை செலுத்துகின்றார் என்பதுவும் இதன் காரணமாகவே என்கிறது சூரிய புராணம்


சூரியனின் 7 நிறங்கள் தொடர்பாக நியூற்றன் சொல்லும் முன்பே நம் வேதங்கள் கூறுவிட்டன.

"சப்த த்வ ஹெரிதோ ரதே வஷந்தி தேவ
சூர்ய சோசிக்கிகம் விக்கசன"
(ரிக்வேதம் 1509)

அவ திவஸ்த சப்த சூரியாச ரஸ்மயா (அதர்வண வேதம் 17:10:171)

சூரியனின் 7 வண்ணங்களே ஒரு பகலை உருவாக்குவதாக இந்த வசனம்கூறுகின்றது. அப்படியனால் சூரியனுக்கு 7 கிரகணங்கள் தானா?இல்லை சூரியனுக்கு கோடிக்கணக்கான ஒளிக்கிரகணங்கள் உண்டு..அனால் ஒவ்வொரு ஒளிக்கிரகணத்துள்ளும் 7 நிறங்கள் உண்டு...

ரிக் மற்றும் அதர்வண வேதங்களில் அடிக்கடி "சப்த அஸவ ருதா" என்ற வேதச்சொல்குறிப்பிடப்படுகின்றது...ஏழு வண்ணங்கள் அடங்கிய ஒரு கிரகணம் என்பதே இதன் பொருள்.அஸ்வ என்ற சொல்லுக்கு சூரியக்கிரகணம் என்று பொருள்...

"ஈகோ அஸ்வ வஹாதி சப்த நமஹ" என்று ரிக்வேதத்தின் 11642 கூறுகின்றது..
இதன் பொருள் மிகவும் ஆழ்ந்த விஞ்ஞானக்கருத்துக்களை கொண்டுள்ளது

அதாவது சூரிய ஒளி ஒன்றுதான்(வெள்ளொளி ) ஆனால் ஏழு வண்ணங்கள் உண்டு என்று கூறுகின்றது.இதை சூரியன் 7 வண்ணம் கொண்ட குதிரைகளை பூட்டி செல்கின்றான் என்னும் உருவகத்துடன் சொல்கின்றது வேதம்.


சாந்தோகிய உபநிஷதத்தில் கூட ஒரு சுலோகம்(861) சூரிய ஒளிக்கு மூன்று நிறங்கள் இருப்பதாக கூருகின்றது ,,ஆனால் இதுகும் சரியான கருத்துதான் ...காரணம் விஞ்ஞானத்தின் படி வர்ணங்கள்மூன்று மட்டுமே....அதை விஞ்ஞானம்மூல வரம் என்று கூறும்.அதாவது மூல வர்ணங்கள் கலப்பதன் மூலமே மற்றைய எல்லா வர்ணங்களையும் பெறமுடியும்.ஆக இதுகூட சரியான வசனமே...

இதை விட நம் முன்னோர்கள் நவக்கிரக வழிபாட்டின்மூலம் சூரியனை மையமாக வைத்தே பிற கோள்கள் யாவும் சுற்றுகின்றன என்பதை கூறிவிட்டனர்..கோவில்களில் நவக்கிர்க சிலைகளை நோக்கும் போது சூரியனை சுற்றியே பிற கோள்கள் இருக்கும்...அதையே விஞ்ஞானமும் கூருகின்றது,..சூரியக்குடும்பத்தில் இருக்கும்கோள்கள் யாவும்சூரியனை மையமாக வைத்தே சுற்றுகின்றன..

அது போக ராசிகளிளின் படியே 12 மாதங்களும் உருவாகின...ஒரு மாதத்தின் இரவு முழுதும் தெரியும் நட்சத்திரத்தின் பெயர் அம்மாதத்திற்கான பெயராக வைக்கப்பட்டது...


மாதம் நட்சத்திரம்

1.சித்ரம் சித்ரா
2.வைசாக விசாகம்
3.ஜேஸ்தம் ஜெஸ்தா
4.அசாதம் அசாதா
5.சரவணம் சரவணய
6.பத்ர பாதா பூர்வபத்ரா
7.அஸ்வயுகாலா அஸ்வினி
8.கார்த்திகா கார்த்திகா
9.மார்க்கசீரா மிருகசீ
10புஸ்யா புஷ்ய
11.மகா மகா
12பால்குணா பால்குனி


இதை விடவும் ஒரு நாள் என்பது பூமி தன்னத்தானே சுற்றுவது என்றும் அதற்கான நேர அளவீட்டையும் ஒரு வருடம் என்பது பூமி சூரியனை சுற்றுவது என்றும் அதற்கான காரணத்தையும் ஆர்ய பட்டா தனது நூலில் குறிப்பிட்டு உள்ளார்..அதை விட சந்திர கிரகணம் மற்றும் சூரியகிரகணம் மற்றும் அமாவாசை பௌர்ணமி பற்றிய கால அளவீடுகளும் பஞ்சாங்கம் என்னும் நூலின் மூலம் மிகமிகமிக சரியான முறையின் கணிக்கப்படுகின்றது என்பது ஆச்சரியமான விடயமே


இத்தைகைய விஞ்ஞான மற்றும் மனோவியல் மற்றும் கலாச்சாரரீதியில் பாரத நாடும் சனாதன தர்மமும் முன்னோக்கிய சிந்தனையை உடையதாக இருந்துள்ளது...அத்தகைய வழியிலும் பரம்பரையிலும் வந்த நம் தர்மம் மதமாற்றம் மற்றும் பகுத்தறிவு என்னும் பெயர்களினால் நம் தர்மத்தை இழிவு படுத்த நினைக்கும் செயல் வருந்ததக்கது..ஆனால் எது எப்படி எனினும் சனாதன தர்மம் வெற்றி பெறும்..கலியுகம் அதர்மம் வெல்வது போன்ற தோற்றம் காணப்பட்டாலும் தர்மமே வெற்றி பெறும்...

தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவும்
தர்மம் மீண்டும் வெல்லும்

ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீரா
ம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்`

No comments:

Post a Comment