Wednesday, August 31, 2016

வேதம் கண்ட விஞ்ஞானம் 2



வேதம் கண்ட விஞ்ஞானம் பகுதி 01 இற்கு ஆதரவு த்ந்த அனைத்து நண்பர்களுக்கும் ஸ்ரீராம சந்திர மூர்த்தியின் பரிபூரண அருள்கடாட்சம் கிடைக்க இறைவேண்டுதலுடன் இரண்டாம் பாகத்தை எழுதுகின்றோம்.

முதலாம பதிவை படிக்க 

http://goo.gl/RYyJv

புவியீர்ப்பு விதி என்றவுடன் நம் எல்லோரின் நினைவுக்கு வருவது சேர்.ஐசக் நியூட்டனும் ஆப்பிள் பழமும் மட்டுமே.காரணம் ஈர்ப்பு விதியை ஐசக் நியூட்டன் கண்டறிந்து உலகறியச்செய்தார் என்பதே வரலாறு..ஆனால் மறைக்கப்பட்ட அல்லது மறைந்து போன இந்திய அறிவியலாளர்களும் இந்திய அறிவியலும் ஏராளம்.காரணம் எம்மீது திணிக்கப்பட்ட அந்திய ஆக்கிரமிப்புக்களும் பகுத்தறிவு என்றபெயரில் மழுங்கடிக்கப்பட்ட எங்களின் வேத,புராணங்களுமேயாகும்.காலம் கடந்து இப்படியான சமூக வலைத்தளங்களின் மூலம் அறிந்து கொள்ள வேண்டிய சூழ் நிலையில் நாம் உள்ளோம் என்பது வருந்தத்தக்க விடயமாகும்.

சரி இனி விடயத்திற்கு வருவோம்.புவியீர்ப்பு விசை பற்றி முதலில் கூறியது.ஐசக் நியூற்றன் அல்ல.இந்திய புராணங்களிலும் வேதங்களிலும் ,பண்டைய காலத்திலும் இது பற்றி தெட்டத்தெளிவாக கூறிவிட்டனர்.

இனி வேதம் மற்றும் நம் முன்னோர்களின் அறிவியல் சார் செய்யுள்களை பார்க்கலாம்...*தர்மத்தின் பாதையில்(page)

பாஸ்கர ஆச்சார்ய என்னும் கணிதமேதை சித்தாந்த சிரோன்மனி என்னும் தனது நூலில்

"அக்ரஸ்டா சக்திஸ்கா தய ஸ்வாஸ்தம்
குரு ஸ்வபிமுகம் ஸ்வஸ்தியா
அக்ரசியாதே தத்பததிவ பதிசமே
சமன்தாத் க்வ பதத்வியாம் சே
"

இதன் பொருள் நவீன விஞ்ஞானங்கள் கூறுவதை அப்படியே கூறி எல்லோரையும் வியப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்லும்.
இதன் பொருள் இதுதான் *தர்மத்தின் பாதையில்(page)
இயற்கையாகவே வானில் உள்ல பொருட்களை தன்னை நோக்கி கவரும் தன்மை கொண்டது பூமி.இத்தகைய ஈர்ப்பு சக்தியினால் எல்லா பொருட்களும் பூமியில் விழுகின்றன.கிரகங்களுக்கு இடையில் சமனான ஈர்ப்பு சக்தி இருக்கும் போது எப்படி விழும் என்று கூறுகின்றனர்.
சூரிய் சித்தாந்தம் புவியீர்ப்பு பற்றி இப்படி கூறுகின்றது

"மத்யே சமந்தாந்தஸ்ய பூகோள வியாமினி திஸ்தாதி
பிப்ஹாரனா பரமம் சஹ்தீம் பிரம்மனோதரனாத்மிகம்"(சூர்யசித்தாந்தம்
அத்தியாயம் 12 சுலோகம் 32)

அதாவது பூமியில் தரனாத்மிகா என்னும் சக்தி உண்டு என்பதாக கூறியுள்ளனர்.அதுவே ஈர்ப்பு சக்தி தர்மத்தின் பாதையில்(page)

அத்துடன் 11ம் நூற்றாண்டில் பாஸ்கராச்சாரியர் என்பவர் தனது லீலாவத் என்னும் புத்தகத்தில் பூமியானது குருத்கவர்சனா சக்தி(புவியீர்ப்பு சக்தி)
கொண்டது.கிரகங்களுக்கு இடையில் ஈர்ப்பு சக்தி உண்டு எனவும் அதனாலேயே அவைகள் கவரப்பட்டு அண்டத்தில் உறுதியாக உள்ளது என்று கூறப்பட்டு உள்ளது. என்று கூறியுள்ளார்.

இத்துடன் 7ம் நூற்றாண்டை சேர்ந்த சந்திரகுப்தா என்ற புகழ் பெற்ற கணிதவியல் அறிஞர் தனது "பிரம்ம புட்டா சித்தாந்தம்" என்ற கணிதவியல் நூலில் பின்வருமாறு கூறி வியப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறார்.

தண்ணீர் இயற்கையாகவே கீழ் நோக்கி செல்லும் தன்மை கொண்டது..ஏனெனின் பூமிக்கு அவ்வாறான கவரும் ஈர்ப்பு சக்தி சக்தி கொண்டது.அதனாலே பூமியில் எல்லா பொருட்களும் கீழே விழுகின்றன" என்று கூறி தற்கால விஞ்ஞானங்களை அப்போதே தெட்டத்தெளிவாக கூரியுள்ளார்.#தர்மத்தின்பாதையில்(page)

இது போக பிரசன்ன உபநிடதத்திற்கு விளக்கவுரை எழுதிய அதிசங்கரன் பின்வருமாறு கூறுகின்றார்.
ததா பிரிதிவியமாபிமனினி யா தேவதா
பிரசித்தா சைசா
பிருசாஸ்ய அபனா பிர்த்திமவஸ்தபியா
க்ர்ஸ்யா வசிக்ரித்யாய ஈவா
அபகர்சேனா அனுகிரகம் குர்வதி
வர்த்தாத்த இத்யார்தா
எனியாதா ஹி சரிரம் குருத்துவபரித்
சவகசி வோட்கசித்
"
இதன் பொருள் என்னவெனின் " மேலே எறியப்படும் பொருட்கள் பூமியால் கவர்ந்திழுக்கப்படுவது போலே உடம்பிலே இருக்கும் உயர்ந்த பிராண சக்தியை அவனா சக்தி இழுக்கின்றது என்று உவமையில் ஈர்ப்பு சக்தியை சாதாரணமாக கூருகிறார்.

பொதுவாக உவமை என்பது ஒரு தெரிந்த விஷயத்தை வைத்து தெரியாத விடயத்தை விளக்குவது ஆகும்..ஆக பூமியின் ஈர்ப்பு விதி அக்காலத்தில் அவ்வளவு தெளிவாக எல்லோரின் தெளிவுடன் நடைமுறையில் இருந்துள்ளது என்பதை பார்க்கும் போது பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடிவதில்லை

தர்மத்தின் பாதையில்(page) பக்கத்தில் தொடர்ச்சியாக இந்த பதிவை எழுத திட்டமிட்டு இருந்தோம்.ஆனால் பெரிய கட்டுரைகளை படிக்க பெரும்பாலானோர் விரும்பாத காரணத்தால் கட்டுரையை சிறு சிறு பதிகளாக பிரித்து தொகுத்து வழங்குகின்றோம்.இது வாசகர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்கின்றோம்.
உங்கள் விமர்சனங்களை கட்டயம் பதிவிலோ தனிப்பட்ட செய்தியிலோ தெரிவியுங்கள்

ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்


No comments:

Post a Comment