Sunday, September 18, 2016

வேதம் கண்ட விஞ்ஞானம் 05
எல்லாம் வல்ல இறைவன் ஸ்ரீகிருஸ்ணரை வணங்கி வேதம் கண்ட விஞ்ஞானம் பாகம் 5இனை எழுதுகின்றோம். கடந்த 4ம் பகுதிக்கு ஆதரவும் வாழ்த்துக்களையும் அளித்த பெருமக்களுக்கு முதற்கண் நன்றிகள் உரித்தாகட்டும்.

4ம் பதிவை படிக்க 

https://www.facebook.com/photo.php?fbid=617537994936578&set=a.575649839125394.1073741828.575646049125773&type=1&theater

சென்ற பதிவுகளில் வானியல் மற்றும் மருத்துவம் சார்ந்த வேத வசனங்களையும் அவற்றின் அறிவியல் அணுகுமுறைகளையும் வேதகாலத்தில் வாழ்ந்த சனாதன தர்மம் சார்ந்த மகாரிஷிகளின் பிரமாண்ட வெளிப்பாடுகள் பற்றியும் விரிவாக தந்து இருந்தோம்..அந்த வகையில் இன்று வேதம் கண்ட விஞ்ஞானம் பகுதி 5இல் அறிவியலின் பௌதீகவியலுடன் வேதங்கள் எந்த அளவுக்கு ஒத்து போகின்றன என்பது குறித்து பார்க்க இருக்கின்றோம்..

பௌதீகவியல் என்பது விஞ்ஞானத்தின் அத்திவார என்று கூட கூறலாம்..இன்னும் லட்சக்கணக்கான விடயங்களுக்கு விடைதெரியாத பகுதியே பௌதீகவியல்..அதிலும் ஒளி,மற்றும் போட்டோன்கள் என்பது தொடர்பான ஆராய்வுகள் மிகவும் முக்கியமானவை.

அந்த வகையில் இன்றைய வேதம் கண்ட விஞ்ஞானம் பௌதீகவியல் தொடர்பாக ஆராய உள்ளது..


ஒளியின் வேகம் தொடர்பாக 20ம் நூற்றாண்டில் மேலை நாட்டு விஞ்ஞானிகள் ஒளியின் வேகத்தை கண்டறிந்தனர்..ஆனால் இற்றைக்கு 3395 வருடங்களுக்கு முன்பே மகாரிஷி சயனக்கார்ய என்பவர் இதை துல்லியமாக கணித்துக்கூறியுள்ளார்..

வேதங்களுக்கான விளக்கவுரையை எழுதும் போது குறித்தசுலோகத்திற்கான விளக்கத்தில் இதைகூறி உள்ளார்..


தரணிர் விஸ்வதர்சடோ ஜோதிஸ்க்ர்தாஸி
சூரியா விஸ்வாம பாசி ரோகணம்
ரிக் வேதம் 1504

மேற்சொன்ன வேத வசனத்திற்கு விளக்கவுரை கூரும் போதே மகாரிஷி சயனகார இந்த ஒளியின் வேகத்தை கணித்து கூறியுள்ளார்..

"யோஜனானாம் சகஸ்ரம் தேவ் சதே தேவ் யோஜனே
ஏக்னா நிமிஷார்தேனா கிரமமனா நமோஸ் துதி"

என்னும் சுலோகம் மூலம் ஒளியின் வேகம் குறித்துகாட்டப்பட்டது...அதன் படி கணக்கிட்ட வேகமும் நவீன விஞ்ஞானம் கூறிய வேகமும் சரியாக காணப்பட்டது என்பதே ஆச்சரியத்தின் உச்சம்..

மேற்கொண்ட உண்மையை 1890 மார்க் முல்லர் என்பவரால் தொகுக்கப்பட்ட ரிக் வேதத்திலும் காணக்கூடியதாக உள்ளது....வேதங்களை மொழிபெயர்க்கும் பணிக்கு இவர் சாய்னா பாஷ்யத்தை ஆதாரமாக கொண்டார்..சாய்னா கர்யா என்பவரின் விளக்கவுரை கை எழுத்துப்பிரதி(கி.மு 1395) பற்றி .முல்லர் குறிப்பிட்டு உள்ளார்

குறிப்பு-அர்த்த சாஸ்திரத்தின் படி யோஜனா என்பது 9.11 மைல்களுக்கு சமன்..அது 8000 தனுசுகளுக்கு சமன்.ஒரு தனுசு என்பது சராசரிமனித உயரத்துக்கு சமன்.அதாவது 6 அடிக்கு சமன்.

வரலாறு என்ற ஒன்று உண்டு.அதில் நிஜங்கள் மட்டுமே நிலைத்திருக்கும். டாக்டர் டேவிட் எட்வின் பின்கிரீ என்ற அமெரிக்க கணிதப்பேராசிரியர் 1952 ஆம் வருடம் தற்செயலாக ரோம் நகரில் உள்ள நூலகத்தில் ஒரு புத்தகத்தைப்பார்த்தார்.அதில் ஒரு ஹிந்து வான சாஸ்திர அறிஞரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.அந்த புத்தகத்தில் கூறப்பட்டிருந்த வானியல் உண்மைகளைப்பார்த்து வியந்துபோனார். அதனால் அவர் அன்று முதல் தனது ஆராய்ச்சியை ஹிந்து கணிதம்,வான சாஸ்திரம் நோக்கித் திருப்பினார்.
கி.பி.1965 ஆம் ஆண்டு நமது பாரதத்திற்கு வந்தார்.இத்துறையில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட 20,000 கிரந்தங்கள்(பாடல்கள்)உள்ளன என்று கணக்கிட்டு அவற்றின் விவரத்தைத் தொகுக்கத்தொடங்கினார்.கி.பி.1995 வரை ஐந்து பெரிய தொகுப்புகளாக அவற்றை வெளியிட்டார்.அவற்றிற்கு Census of Exact Science எனப் பெயரிட்டார்.

அடுத்ததாக இந்தியர்களின் கால அளவீடுகளின் விஞ்ஞானம் பிரமிப்பின் உச்சம்.....பூமி தன்னைத்தானே 1600 கிலோமீற்றர் வேகத்தில் சுற்றுகின்றது..இந்த வேகத்தில் தன்னைத்தானே 24 மணிநேரம் சுற்றுகின்றது..இப்படி சுற்றுவதால் 12 மணி நேரம் பகலாகவும் 12 மணிநேரம் இரவாகவும் கருதப்படுகின்றது..

இந்தியகால அளவுப்படி ஒரு நாள் என்பது 24 ஓரைகளை கொண்டது.ஓரை என்ற சமஸ்கிருத நாளடைவில் மருவி ஆங்கிலத்தில் ஹவர் (hour) என்றும் புருத்விடிவாஸ் என்றும் ஓரோ என்ரும் அழைக்கப்படுகின்றது..

இது போக வெள்ளொளி என்னும் கருத்தை குறித்தும் வேதங்கள் அழகான முறையில் விவரணம் செய்கின்றது...வெள்ளொளி என்பதில் 7 நிறங்கள் உண்டு என்கிறது நவீன விஞ்ஞானம்,அதையே நம் வேதங்களும் கூறுகின்றது...சூரியன் 7 தேர் பூட்டி தன் ரதத்தை செலுத்துகின்றார் என்பதுவும் இதன் காரணமாகவே என்கிறது சூரிய புராணம்


சூரியனின் 7 நிறங்கள் தொடர்பாக நியூற்றன் சொல்லும் முன்பே நம் வேதங்கள் கூறுவிட்டன.

"சப்த த்வ ஹெரிதோ ரதே வஷந்தி தேவ
சூர்ய சோசிக்கிகம் விக்கசன"
(ரிக்வேதம் 1509)

அவ திவஸ்த சப்த சூரியாச ரஸ்மயா (அதர்வண வேதம் 17:10:171)

சூரியனின் 7 வண்ணங்களே ஒரு பகலை உருவாக்குவதாக இந்த வசனம்கூறுகின்றது. அப்படியனால் சூரியனுக்கு 7 கிரகணங்கள் தானா?இல்லை சூரியனுக்கு கோடிக்கணக்கான ஒளிக்கிரகணங்கள் உண்டு..அனால் ஒவ்வொரு ஒளிக்கிரகணத்துள்ளும் 7 நிறங்கள் உண்டு...

ரிக் மற்றும் அதர்வண வேதங்களில் அடிக்கடி "சப்த அஸவ ருதா" என்ற வேதச்சொல்குறிப்பிடப்படுகின்றது...ஏழு வண்ணங்கள் அடங்கிய ஒரு கிரகணம் என்பதே இதன் பொருள்.அஸ்வ என்ற சொல்லுக்கு சூரியக்கிரகணம் என்று பொருள்...

"ஈகோ அஸ்வ வஹாதி சப்த நமஹ" என்று ரிக்வேதத்தின் 11642 கூறுகின்றது..
இதன் பொருள் மிகவும் ஆழ்ந்த விஞ்ஞானக்கருத்துக்களை கொண்டுள்ளது

அதாவது சூரிய ஒளி ஒன்றுதான்(வெள்ளொளி ) ஆனால் ஏழு வண்ணங்கள் உண்டு என்று கூறுகின்றது.இதை சூரியன் 7 வண்ணம் கொண்ட குதிரைகளை பூட்டி செல்கின்றான் என்னும் உருவகத்துடன் சொல்கின்றது வேதம்.


சாந்தோகிய உபநிஷதத்தில் கூட ஒரு சுலோகம்(861) சூரிய ஒளிக்கு மூன்று நிறங்கள் இருப்பதாக கூருகின்றது ,,ஆனால் இதுகும் சரியான கருத்துதான் ...காரணம் விஞ்ஞானத்தின் படி வர்ணங்கள்மூன்று மட்டுமே....அதை விஞ்ஞானம்மூல வரம் என்று கூறும்.அதாவது மூல வர்ணங்கள் கலப்பதன் மூலமே மற்றைய எல்லா வர்ணங்களையும் பெறமுடியும்.ஆக இதுகூட சரியான வசனமே...

இதை விட நம் முன்னோர்கள் நவக்கிரக வழிபாட்டின்மூலம் சூரியனை மையமாக வைத்தே பிற கோள்கள் யாவும் சுற்றுகின்றன என்பதை கூறிவிட்டனர்..கோவில்களில் நவக்கிர்க சிலைகளை நோக்கும் போது சூரியனை சுற்றியே பிற கோள்கள் இருக்கும்...அதையே விஞ்ஞானமும் கூருகின்றது,..சூரியக்குடும்பத்தில் இருக்கும்கோள்கள் யாவும்சூரியனை மையமாக வைத்தே சுற்றுகின்றன..

அது போக ராசிகளிளின் படியே 12 மாதங்களும் உருவாகின...ஒரு மாதத்தின் இரவு முழுதும் தெரியும் நட்சத்திரத்தின் பெயர் அம்மாதத்திற்கான பெயராக வைக்கப்பட்டது...


மாதம் நட்சத்திரம்

1.சித்ரம் சித்ரா
2.வைசாக விசாகம்
3.ஜேஸ்தம் ஜெஸ்தா
4.அசாதம் அசாதா
5.சரவணம் சரவணய
6.பத்ர பாதா பூர்வபத்ரா
7.அஸ்வயுகாலா அஸ்வினி
8.கார்த்திகா கார்த்திகா
9.மார்க்கசீரா மிருகசீ
10புஸ்யா புஷ்ய
11.மகா மகா
12பால்குணா பால்குனி


இதை விடவும் ஒரு நாள் என்பது பூமி தன்னத்தானே சுற்றுவது என்றும் அதற்கான நேர அளவீட்டையும் ஒரு வருடம் என்பது பூமி சூரியனை சுற்றுவது என்றும் அதற்கான காரணத்தையும் ஆர்ய பட்டா தனது நூலில் குறிப்பிட்டு உள்ளார்..அதை விட சந்திர கிரகணம் மற்றும் சூரியகிரகணம் மற்றும் அமாவாசை பௌர்ணமி பற்றிய கால அளவீடுகளும் பஞ்சாங்கம் என்னும் நூலின் மூலம் மிகமிகமிக சரியான முறையின் கணிக்கப்படுகின்றது என்பது ஆச்சரியமான விடயமே


இத்தைகைய விஞ்ஞான மற்றும் மனோவியல் மற்றும் கலாச்சாரரீதியில் பாரத நாடும் சனாதன தர்மமும் முன்னோக்கிய சிந்தனையை உடையதாக இருந்துள்ளது...அத்தகைய வழியிலும் பரம்பரையிலும் வந்த நம் தர்மம் மதமாற்றம் மற்றும் பகுத்தறிவு என்னும் பெயர்களினால் நம் தர்மத்தை இழிவு படுத்த நினைக்கும் செயல் வருந்ததக்கது..ஆனால் எது எப்படி எனினும் சனாதன தர்மம் வெற்றி பெறும்..கலியுகம் அதர்மம் வெல்வது போன்ற தோற்றம் காணப்பட்டாலும் தர்மமே வெற்றி பெறும்...

தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவும்
தர்மம் மீண்டும் வெல்லும்

ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீரா
ம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்`

Tuesday, September 6, 2016

அணுவின் இயக்கத்தை விளக்கும் நடராஜர்


விஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன். (பிறப்பு 9-11-1934; மறைவு 20-12-1996). சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச் சிறப்பு!

பாமரனுக்கும் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில் இவர் கடுமையாக உழைத்தார். தொலைக்காட்சித் தொடர்களை எளிய முறையில் அமைத்து பெரிய விஞ்ஞான விஷயங்களை அழகுற எளிமையாக விளக்கினார்.

அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த 'காஸ்மாஸ்' என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார். 13 எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி விளக்க வேண்டும்.

இந்தத் தொடரை ஒரு நல்ல அறிமுக உரையுடன் துவக்க அவர் எண்ணினார். இதற்காக பிரபஞ்சம் பற்றிய அறிவை சரியான முறையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்கும் விளக்கத்திற்கும் ஒப்ப எந்த நாகரிகம் கொண்டிருக்கிறது என்று ஆராய ஆரம்பித்தார். உலகின் மிகப் பழம் பெரும் நாகரிகங்களான எகிப்திய, சுமேரிய, கிரேக்க ரோமானிய, பாபிலோனிய நாகரிகங்கள் உள்ளிட்ட அனைத்து நாகரிகங்களையும் ஆராய்ந்தும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. பல்வேறு நாகரிகங்களையும் அவை சார்ந்த மதங்களையும் ஆராயப் புகுந்தவர் அவற்றின் இதிஹாஸ புராணங்களையும் படிக்க நேர்ந்தது. இறுதியாக அவர் பார்வை ஹிந்து நாகரிகத்தின் மீதும் ஹிந்து இதிஹாஸ புராணங்களின் மீதும் பதிந்தது. ஹிந்து மதத்தின் அறிவியல் ரீதியான பிரபஞ்சம் பற்றிய கொள்கையைப் படித்துப் பிரமித்து அவர் அசந்தே போனார்.
இந்தியர்கள்தான் உலகிற்கே பூஜ்யத்தை வழங்கியவர்கள். ஒன்றுக்கு பக்கத்தில் பூஜ்யத்தைப் போட்டால் அது பத்து, நூறு, ஆயிரம் என்று அதிகரிக்கிறது. ஆனால் ஒன்றுக்கு இடப்பக்கதில் எத்தனை பூஜ்யங்களைப் போட்டாலும் ஒன்று ஒன்றாகவே இருக்கிறது. இந்த வியப்பிற்குரிய அமைப்பு கணிதத்தையே எளிமையாக்கி எவ்வளவு பெரிய எண்ணானாலும் எழுதுவதற்கும் கணக்குகளைப் போடுவதற்கும் சௌகரியத்தை ஏற்படுத்தியது. ரோமானிய எழுத்துக்களால் எழுதப்படும் எண்ணோ ஒரு பெரிய தொகையை எழுதும் போது மிக்க குழப்பத்தை விளைவிக்கிறது. சுலபமான நடைமுறையில் இல்லாத அதை எழுதவே சிரமப்பட வேண்டும்.

இது மட்டுமன்றி எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்ற எண்களெல்லாம் மிக மிகச் சிறியவை ஆகி விடுகிறது. பெரிய பெரிய எண்களைக் குறிக்கும் வார்த்தைகள் எந்த நாகரிகத்தில் இருக்கிறது என்று பார்த்தால் திரும்பவும் பார்வை ஹிந்து மதம் பக்கமே திரும்ப வேண்டும்!


விஞ்ஞானத்தின் முக்கிய இயல்களில் ஒன்றான இயற்பியல் (பிஸிக்ஸ்) முன்னேற முன்னேற
அதன் புதுப் புதுப் பகுதிகளாக க்வாண்டம் பிஸிக்ஸ், பார்டிகிள் பிஸிக்ஸ் போன்றவை
உருவாகி உள்ளன.கார்ல் சகன் தனது காஸ்மாஸ் டி.வி. தொடருக்காக நடராஜரைத் தேடி சிதம்பர ரகசியத்தை அறிய தமிழ்நாடு வந்தார். தமிழ்நாட்டில் ஒரு நாள் காலை ஆறரை மணிக்கு தனது படப்பிடிப்புக் குழுவினர் புடைசூழ நந்தி இருக்கும் இரு கோவில்களுக்கு விஜயம் செய்தார். ஒரு கோவிலின் அருகே தாமரைத் தடாகம் ஒன்று இருந்தது. இவர்கள் வருவதைப் பார்த்த பத்து வயதுச் சிறுவன் ஒருவன் சரேலென தாமரைக் குளத்தில் பாய்ந்து ஒரு அழகிய தாமரை மலரைப் பறித்து வந்து கார்ல் சகனின் மனைவியிடம் தந்து தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான்.


எளிமையான, ஆனால் உணர்ச்சிபூர்வமான இந்த அன்பளிப்பால் அனைவரும் அசந்து போனார்கள். இதை நினைத்து நினைத்து நெகிழ்ந்து போன கார்ல் சகன் பின்னால் நியூ டைஜஸ்ட் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரான ப்ளேசிடோ பி.டி.சௌஸா என்பவரிடம் இதைச் சொல்லி தமிழக விஜயம் தனக்கு பல அதிசய அனுபவங்களைத் தந்ததாகக் குறிப்பிட்டார்.


பிரபஞ்சத்தில் எல்லையற்ற காலத்தையும் ஆக்கலையும் அழித்தலையும் சுட்டிக் காட்டும் சிவநடராஜரைப் பற்றி தமிழகத்தில் அறிந்து கொண்டு நடராஜரைத் தன் காஸ்மாஸ் தொடரில் பத்தாவது எபிசோடான 'தி எட்ஜ் ஃபார் எவரில்' (The edge forever) அவர் பயன்படுத்திக் கொண்டார். கலிஃபோர்னியாவில் பாஸடோனா என்ற இடத்தில் உள்ள நடராஜரை அவர் படம் பிடித்தார்.


இதே கால கட்டத்தில் அணுத்துகள் விஞ்ஞானத்தை விளக்க வந்த உலகின் மிகப்பெரும் இயற்பியல் விஞ்ஞானியான டாக்டர் பிரிட்ஜாஃப் காப்ரா சிவ நடராஜாவின் நடனத்தைக் கண்டு அதிசயித்திருந்தார்! ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர். "தி டாவோ ஆஃப் பிஸிக்ஸ்' (The Tao of Physics) என்ற இவரது நூல் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நூல் 1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக வெளிவந்த இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்தனர்; இன்றும் படித்து இன்புறுகின்றனர்!


அதில் அவர் சிவ நடராஜரின் நடனம் பற்றிக் கூறுகிறார்:-"மேலை நாடுகளின் இயந்திரத்தனமான பார்வையை விட கீழை நாடுகளின் பார்வை உயிருள்ள முழுமையான ஒன்று; அது சுற்றுப்புறச் சூழலை ஒட்டியது! கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான்! பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட்டது. இந்தக் கருத்தே இன்றைய நவீன பௌதிகத்திலும் உருவாகி வருகிறது. நவீன பௌதிகம் அணுத்துகளை - தொடர்ந்து நடனமாடும் ஒன்றாக - அதிர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாகக் கூறுகிறது. கீழை நாட்டு ஞானிகள் உலகைப் பற்றி விவரிப்பது போலவே இது உள்ளது. ஆற்றல் நடனம் அல்லது உலகை உருவாக்கி பின்னர் அழிக்கும் நடனமானது சிவ நடராஜரின் நடனம் போலவே உள்ளது."


அணுத்துகள் விஞ்ஞானம் கற்க விரும்புவோர் நடராஜரின் நடனத்தைப் பற்றி முதலில்
சற்று அறிய வேண்டும் என்றார் காப்ரா! அணுவில் உள்ள அசைவை - நடனத்தை - சிவ நடராஜரின் ஆட்டத்தில் கண்ட காப்ரா அதை அப்படியே லாஸ் ஏஞ்சலீஸில் 1977 அக்டோபர் 29ம் தேதி பிஸிக்ஸ் அண்ட் மெடா பிஸிக்ஸ் என்ற கருத்தரங்கத்தில் தான் ஆற்றிய முக்கிய உரையில் உலகத்திற்கு விளக்கினார்:
"நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமிடும் ஒன்றாகக் கருதுகின்றனர். இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனத்தைச் சித்தரிக்கும் அருமையான ஓவியங்களையும் சிற்பங்களையும் படைத்துள்ளனர். இவை பிரபஞ்ச நடனத்தின் பார்வை சித்திரங்களாகும். மேற்கத்திய நவீன உபகரணங்களை உபயோகித்து இப்போது நாம் கண்டறிந்துள்ளவை சிவ நடனத்தின் புதிய பிரதியே. ஹிந்து சிற்பங்களில் உள்ள பிரம்மாண்டமும் அழகும் இதிலும் உள்ளன என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆகவே அவை இரண்டையும் இணைத்துள்ளேன்."நவீன உபகரணங்கள் மூலமாக அணுவில் உள்ளே துகள்கள் நடனமிடும் அற்புதக் காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே நடராஜரின் நடனத்துடன் ஒப்பிடும் காட்சியைப் பார்த்த உலக விஞ்ஞானிகள் வியந்தனர்.


விஞ்ஞானிகள் தங்களது நவீன உபகரணங்கள் வாயிலாகக் கண்டதை நம் மெய்ஞானிகள் அந்தக்கரணம் வழியே கண்டு அப்படியே உலகிற்கு எடுத்துரைப்பதன் உதாரணம்தான் அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடிய பரமகுருவாய், அணுவில் அசைவாய் என்ற வரிகளாகும் (இருவர் மயலோ என்று தொடங்கும் திருப்புகழ்)


இதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி ஐரோப்பிய அணுத்துகள் இயற்பியல் ஆராய்ச்சி மையத்திற்கு இந்திய அரசாங்கம் 2 மீட்டர் (சுமார் ஆறு அடி) உயரமுள்ள நடராஜரின் சிலையை அந்த நிறுவன விஞ்ஞானிகள் இந்தியாவுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் நல்லுறவைப் போற்றும் வகையில் வழங்கியது. (ஜெனிவாவில் அமைந்திருக்கும் இந்த மையத்துக்கு இந்தியா வழங்கிய நடராஜரின் சிலையைப் படத்தில் பார்க்கலாம்)


செர்ன் (CERN) விஞ்ஞானிகள் அணுத்துகள் நடனத்தையும் நடராஜரின் நடனத்தையும் ஒப்பிடுவதைப் போற்றி நன்றி தெரிவிப்பதற்காக இதை வழங்குவதாக நம் அரசு பெருமையுடன் தெரிவித்தது.

ஆக, விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் நம் சிதம்பர நடராஜரின் நடனம் என்பதை அறியும் போது நம் மெய் சிலிர்க்கிறது அல்லவா?!

இப்படிப்பட்ட பதிவுகளை இத் தளத்தில் ஏன் இடுகிறோம் என்றால் இனிமேல் ஆவது இந்து மத மகிமையை உணர்ந்து இந்து மதத்தை இழுக்காக்கும் ஆசாமிகள் பற்றி பதிவிடும் பதிவாளர்கள் இந்துவின் மகிமை பற்றி பதிவிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம்..

என்றும் அன்புடன்
தர்மத்தின் பாதையில்


Monday, September 5, 2016

கிருஸ்ணர் வாழ்ந்த இடத்தை கண்டறிந்த தொல்பொருள் ஆய்வுகிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகையும் 5200 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கியது. தொல்லியல் ஆராய்ச்சியில், புதைந்த பகுதிகளைக் காண முடிந்ததால் துவாரகை இருந்தது உண்மை என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

தொல்லியல் ஆராய்ச்சி: இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம், துவாரகை கடல்பகுதியில், 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. குஜராத் மாநிலம் லோத்தல் பகுதியில் தொல்லியில் ஆய்வாளர் எஸ்.ஆர். ராவ் தலைமையில் ஆய்வு நடந்தது. பழமையான நகரமான துவாரகை கடலுக்குள் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆய்வின்போது துவாரகையின் ஒருபகுதியான பேட் துவாரகையில் கி.மு.1528ம் ஆண்டைச் சேர்ந்தமண்பாண்டத்தையும், கடற்கரையில் 560மீட்டர் நீளமுள்ள சுவர் ஒன்றையும் கண்டனர். இப்பகுதி கிருஷ்ணர் ஆண்ட துவாரகை என முடிவு செய்தனர். இந்த முடிவுகளை எஸ்.ஆர்.ராவ், தி லாஸ்ட் சிட்டி ஆப் துவாரகா என்னும் நூலாக ஆங்கிலத்தில் வெளியிட்டார். இந்த ஆய்வு மூலம் மகாபாரதம் உண்மையில் நடந்த நிகழ்ச்சி என்பது உறுதியானது. மகாபாரத முடிவில் வந்த கலியுகம் தொடங்கி, 5113 ஆண்டுகள் ஆகிறது. அதற்கு 87 ஆண்டுகளுக்கு முன்பே துவாரகை மூழ்கியதால், இந்நகரம் மூழ்கி 5200 ஆண்டுகளாகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

பேட் துவாரகை: கோமதி நதிக்கரையில் அமைந்த துவாரகாவுக்கு துவாரமதி, துவாரவதி, குசஸ்தலை என்ற பெயர்களும் உண்டு. துவாரகை அருகிலுள்ள பேட் துவாரகையிலும் கிருஷ்ணர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இங்கு 18 மீட்டர் அகலம் கொண்ட இரண்டு பிரதான சாலைகள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய குடியிருப்புகள், மூன்று பிரம்மாண்ட கட்டடத் தொகுப்புகள் தென்படுகின்றன. சுவரைக் கட்ட பயன்படுத்திய கற்கள், 3600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை வாய்ந்ததாக உள்ளது. பேட் துவாரகை ஒரு தீவுப்பகுதியாகும். இங்கு தான் கிருஷ்ணர், சத்தியபாமா, ஜாம்பவதி ஆகியோர் பொழுதுபோக்க வந்துள்ளனர். ஆங்காங்கே பூந்தோட்டம், ஏரிகளும் உள்ளன.

மூழ்கிய துவாரகை: கடலில் மூழ்கிய துவாரகையில், அடிப்படை வசதியுள்ள குடியிருப்பு, வியாபார இடங்கள், அகன்ற சாலை, அழகான துறைமுகம் இருந்துள்ளன. தங்கம்,வெள்ளி, நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட கட்டடங்களும் இங்கு பிரசித்தமாக விளங்கியுள்ளன. குரு÷க்ஷத்ர யுத்தம் முடிந்து 36 ஆண்டுகளுக்குப்பின், துவாரகை முழுவதும் கடலுக்கடியில் மூழ்கியது. இதனை முன்கூட்டியே அறிந்த கிருஷ்ணர் யாதவர்களை பிரபாஸ் என்ற உயரமான மலைப்பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாத்தார். தற்போது இப்பகுதி சோம்நாத் எனப்படுகிறது. அழிந்த துவாரகையை நீர்மூழ்கிக்கப்பலில் சென்று பக்தர்கள் பார்ப்பதற்கு இந்தியக்கடல் அகழ்வாராய்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து வருகிறது. தேவலோக தச்சன் விஸ்வகர்மா இந்நகரத்தைக் கட்டியதாக புராணங்கள் சொல்கின்றன.

துவாரகாநாத்ஜி மந்திர்: துவாரகை அழிந்த பிறகு, அங்கு மூன்று முறை கோயில் கட்டப்பட்டிருக்கிறது. எல்லாமே கடலில் மூழ்கியிருக்கலாம் அல்லது பிற சமயத்தாரால் அழிக்கப்பட்டிருக்கலாம். தற்போது உள்ள கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இது துவாரகாநாத்ஜி மந்திர் எனப்படுகிறது. மூலவர் கல்யாண நாராயணர் என்ற திருநாமத்துடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் திருநாமம் கல்யாண நாச்சியார். கண்ணனின் எட்டு துணைவியர் (அஷ்ட மகிஷிகள்), அண்ணன் பலராமன், துர்வாச மகரிஷி ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. இங்கு மன்னராக கண்ணன் வீற்றிருப்பதாக ஐதீகம்.

17முறை போக்: துவாரகை கிருஷ்ணருக்கு தினமும் 17முறை உணவு படைக்கப்படுகிறது. இதை போக் என்பர். உடையும் தொடர்ந்து மாற்றப்படுகிறது. காலையில் சுவாமியை எழுப்பும் நிகழ்ச்சி உடாபன் எனப்படும். கிருஷ்ணனை பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் பாடியுள்ளனர்.

இருப்பிடம்: குஜராத் தலைநகர் அகமதாபாத்திலிருந்து 455 கி.மீ.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=nQZFS9Hij0M


Wednesday, August 31, 2016

கலியுக நிலை பற்றி பாகவதம்ஸ்ரீபகவானின் காலசக்கரத்தின் படி தற்போது கலியுகம் நடந்து கொண்டு உள்ளது..இதன் அடையாளங்களே ஸ்ரீமத் பாகவததில் 12ம் காண்டம் 2ம் அத்தியாயம் 
ஸ்ரீமத் பாகவதம் 12ம் காண்டத்தில் கலியுகத்தின் அடையாளம் பற்றி பகவான் ஸ்ரீபரமாத்மா தெளிவாக விபரிக்கின்றார்.அவைகளை இன்றைய நிலையோடு ஒப்பிட்டு பார்க்கையில் இத்தீர்க்கதரிசனத்தின் உண்மை நிலை புலப்படும்..

கலியுகமானது பின்வரும் நடவடிக்கைகளை கொண்டு இருக்கும்1. தர்மம்,சத்தியம்,தூய்மை,பொறுமை,கருணை,ஆயுள்,தேகபலம்,ஞாபகசக்தி, ஆகியன குறைந்து கொண்டே வரும்
2. செல்வம் மட்டுமே ஒருவனின் நற்குணத்திற்கும்,பிறப்பிற்கும்,நடத்தைக்கும் அடையாளமாக கருதப்படும்
3. சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்திற்கு கீழ் நடத்தப்படும்
4. புறக்கவர்ச்சியால் (உடல் அழகு) மட்டுமே ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வார்கள்
5. வியாபரத்தில் வஞ்சகம் நிறைந்து இருக்கும்(ஊழல்)
6. பெண்மையும் ஆண்மையும் உடலுறவின் திறமையினால் மட்டும் தீர்மானிக்கப்படும்(உடலுறவில் கூடுதல் நாட்டம் உள்ளவர் அதிக ஆண்மை அல்லது பெண்மை உள்ளவர் என கணிக்கப்படும்)
7. காம இச்சையே திருமணத்தின் பிரதான நோக்கமாக இருக்கும்
8. மதம் அல்லது ஆன்மீகம் ஒருவனின் புற அடையாளங்களுக்காக தீர்மானிக்கப்படும்
9. மக்கள் ஒரு ஆன்மீக பிரிவில் இருந்து இன்னோர் மதத்திற்கு மாறிச்செல்வார்கள்
10. ஒருவன் அதிக பொருள் சம்பாதிக்கவில்லை என்றால் அவனின் தகுதி அதிகமாக விமர்சிக்கப்படும்
11. மேலும் வார்த்தை ஞாலங்களால் மட்டுமே ஒருவன் அறிஞர் மற்றும் ஞானி என்ரு அழைக்கப்படுவார்
12. பொருளற்றவன் புனிதமற்றவனாக கருதப்படுவான்
13. கபட நாடகமே சீரிய பண்பாக கருதப்படும்
14. வெறும் பேச்சளவு ஒப்பந்ததினால் மட்டுமே திருமணம் நிச்சயிக்கப்படும்
15. ஸ்நானம் செய்வது மட்டுமே பொது இடங்களில் தோற்றம் அளிக்கும் தகுதி என நினைப்பான்(நகை,ஆடை ,மற்றும் குளித்தல் மட்டுமே சபைக்கு தேவையானது என நினைப்பான்)
16. தூரத்தில் உள்ள தீர்த்தம் புண்ணிய ஸ்தலமாக ஏற்றுக்கொள்ளப்படும்
17. அழகு என்பது பெரும்பாலும் சிகை அலங்காரத்தை பொறுத்ததாக இருக்கும்(தலை முடி அலங்காரம்)
18. வயிற்றை நிரப்புவதே வாழ்வின் நோக்கமாக இருக்கும்
19. இருமாப்பு உள்ளவன் சத்தியவானாக ஏற்றுக்கொள்ளப்படுவான்
20. வெறும் நற்பெயருக்காகவே மதக்கொள்கை அனுஷ்டிக்கபடும்(பக்தி உள்லவன் நல்லவன் என்னும் கருத்து நிலவும்)
21. பூமி பூமியற்றதால் சனத்தொகையால் நிரம்பி இருக்கும்
22. ஒரு சமூகப்பிரிவில் உள்ளவன் தன்னை வலிமை மிக்கவன் என்று காட்டினால் அவனே அரசியல் அதிகாரத்தை பெறுவான்
23. சாதாரண திருடர்களை போல நடந்து கொள்ளும் இத்தலைவர்களிடம் மக்களையும்,மனைவிகளையும் ,உடமைகளையும் இழந்து பிரஜைகள் மலைகளுக்கும் காடுகளுக்கும் ஓடிவிடுவர்
24. பஞ்சம் அதிக வரி என்பவற்றால் பாதிப்புற்ற மக்கள் மாமிசம் மற்றும் இலை,தேன்,வேர்,மரம் என்பவற்றை தின்று வறட்சியாலும் இறப்பர்
25. பசி,மழை ,காற்று,புயல்,வெப்பம்,என்பவற்றாலும் நோய்,பசி,சண்டை சச்சரவுகள் என்பவற்றாலும் மக்கள் சித்திரவதைப்படுவர்
26. சமயக்கோட்பாடுகள் அழியும்
27. ஒருவன் பூணூல் அணிந்து இருப்பதால் மட்டுமே பிராமணர் என்று சொல்லப்படுவார்கள்
28. கலியுக முடிவில் கெடும்.மனித சமூகம் வேத மார்க்கத்தை முழுவதுமாக மறப்பர்
பல இன்னல்கள்,திருட்டு பொய் ,களவு.என்பவை அதிகரிக்கும்
மிருகங்கள் அளவில் சிறுக்கும்,மாடுகள் எல்லாம் ஆடுகளை போல சிறியதாய் தோற்றம் பெறும்,மூலிகைகள் அழிந்து விடும் .
29. இத்தைகைய காலத்தில் பரமபுருசன் கல்கி பகவான் பூமியில் அவதர்ப்பார்.அவர் தூய ஆன்மீக ஞானத்துடன் செயற்பட்டு பூமியில் நித்திய தர்மத்தை நிலை நாடுவார்\
30. பரம புருசரான விஸ்ணு பகவான் கர்ம பலன்களில் இருந்து விடுவிப்பதற்காகவும் தர்மத்தை காக்கவும் பக்தர்களை காக்கவும் பிறவி எடுப்பார்
31. இவர் "சம்பல" என்னும் கிராமத்தில் பிறப்பார்
32. இவர் விஸ்னியசரின் என்னும் பிராமணர் வீட்டில் தோன்றுவார்
33. அவர் தனது "தேவதத்தம்" என்னும் குதிரையில் கடுமையான வேகத்தில் பூமி முழுவதும் பயணிப்பார்.தனது எட்டு விஷேஷ குணங்களையும் வெளிப்படுத்தியபடி அரசர்களாய் உடையணிந்து அக்கிரமம் செய்யும் ஆட்சியாளர்களையும் அக்கிரமம் செய்வோரையும் கொன்று குவிப்பார்
34. வேஷ்தாரிகளை கொன்ற பின்பு சந்தனப்பசை நறுமணம் உலகெங்கும் பரவும்.மக்களின் மனம் தெய்வீகத்தன்மை நிறைந்ததாக மாறும்
35. கல்கி பகவான் பூமியில் தோன்றும் போது சத்ய யுகம் தோன்றும்
36. பெண்களின் வயிற்றில் சாத்வீகமான குணஙளுடன் கரு உண்டாகும்
அதை பின்பு மீண்டும் சத்ய யுகம் ஆரம்பமாகி கலியுகத்தின் அடையாளம் மறைந்து தெய்வீக சூழலும் இயல்பும் தலை தூக்கும்

வேதம் கண்ட விஞ்ஞானம் 04வேதம் கண்ட விஞ்ஞானம் பகுதி 3இனை தொடர்ந்து பகுதி 4 இனை உங்களின் பார்வைக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.மூன்றாம் பதிவுக்கு ஆதரவு தந்த அனைத்து பெருமக்களுக்கும் எம் நன்றிகளையும் சிரம்தாழ்ந்த வணக்கத்தையும் கூறிக்கொண்டு 4ம் பதிவை எழுதுகின்றோம்.
தயவு செய்து இந்த பதிவை முழுமையாக வாசிக்கவும்

#தர்மத்தின் பாதையில் 

பிளாஸ்டிக் சேர்ஜரி, கண்மாற்று சிகிச்சை,செயற்கை கால் அறுவை சிகிச்சை,மூளைக்கட்டியை சுகமாக்கல் போன்ற பல விடயங்கள் பற்றி வேதம் மற்றும் நம் முன்னோர்களின் அறிவுசார் பல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான சுவடுகள் பற்றிய விபரம் 4ம் பதிவில் எழுதி உள்ளோம் #தர்மத்தின் பாதையில்(page)

சென்ற மூன்று பதிவுகளிலும் வானியல் சம்பந்தமான பல வேதவிஞ்ஞானங்களை பற்றிய அறிவை பகிர்ந்து கொண்டோம்...வானியலில் இன்னும் சில பதிவுகள் இருந்தாலும் இன்றைய பதிவில் ரிக் மற்றும் அதர்வன வேதங்களில் உள்ள மருத்துவம் என்னும் தலைப்பில் சில விடயங்களை பகிர்ந்து கொள்கின்றோம்.அதை தொடர்ந்து வானியல் தொடர்பான வேத விஞ்ஞானங்களை பார்க்கலாம்

சென்ற பதிவினை வாசிக்க
https://www.facebook.com/photo.php?fbid=616850941671950&set=a.575649839125394.1073741828.575646049125773&type=1&theater

மருத்துவம் என்பது தெய்வீகக்கலை.விஞ்ஞான வளர்ச்சியுடன் மருத்துவத்துறையின் வளர்ச்சி இடம் பெற்றது.இன்றைய நவீன காலம் பல தொழில்நுட்ப சாதனங்களுடனும் பல கட்டமைப்பான வசதிகளுடனும் தன் மருத்துவ துறையை நிர்வகித்து முன் எடுத்து செல்கின்றது.இதில் எந்த வித ஆச்சரியமான விடயமும் இல்லை.ஆனால் ஏந்த வித கருவிகளும் எந்த வித தொழில் நுட்பமுமில்லாத காலத்தில் அறுவை சிகிச்சை ,கண்மாற்று அறுவை சிகிச்சை ,செயற்கை கால் பொருத்தல் போன்ற மருத்துவ சிகிச்சையும் அது பற்றிய குறிப்புகளும் இடம்பெற்று இருப்பது கொஞ்சமும் ஊகிக்க முடியாத சம்பவங்களே..


ரிக் வேதத்திலும் அதர்வணா வேதத்திலும் மருத்துவக்குறிப்புக்கள் ஏராளமான சுலோகம் மூலம் விளக்கப்பட்டு உள்ளது...சித்த மருத்துவம் கூட எம் பாரத தேசத்து ஆன்மீக நாயகர்களான சித்தர்களின் அற்புதமான வெளிப்பாடுகளே ஆகும்.அத்தைகைய பெருமை மிக்கது நம் பாரத தேசம்.பாரத தேசம் மட்டும் அல்ல இலங்கையில் கூட பல சித்தர் பெருமக்கள் தோன்றி பல மருத்துவ குறிப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர்.

இனி நம் பாரததேசத்தின் மருத்துவ குறிப்புக்களை வரலாற்று ரீதியாகவும் வேத ஆதாரங்கள் மூலம் பார்க்கலாம்.

இந்திய மருத்துவ துறைக்கு ஆயுர்வேதம் புதையலை போன்றது.ஆயுர்வேதம் என்பது ரிக் வேதத்தின் உபவேதமாக வைத்து வணங்கப்பட்டது. ****(தர்மத்தின் பாதையில்(page)
அதர்வண வேதத்தின் அடுகைப்படல்களும் ஆயுர்வேதம் குறித்து விரிவாக பேசுகின்றது.

பரத்துவராஜ்,ஆத்ரேயா,அக்னிகயா,காரகா ,தன்வந்த்ரி,சுஷ்ருதா மற்றும் பல ஞானிகளிடம் இருந்து இந்த ஆயுர்வேதம் என்ற ஞானப்பேழை உலகிற்கு பரிசாக கிடைத்து இருக்கின்றது.

கேல நாட்டு அரசியான விச்சலா என்பவளுக்கு இரும்பாலான செயற்கை கால் அஸ்வினி மருத்துவரால் பொறுத்தப்பட்டது என ரிக் வேதத்தில் கூறப்பட்டு உள்ளது

ரிக்வேதம் 1:116:14 மற்றும் 1:116:15 என்னும் வசனங்கள் மாற்றுக்கால் பொருத்துவது பற்றி அஸ்வினி என்னும் மகரிஷியின் மருத்துவ பெருமை பற்றி கூறுகின்றது
அத்துடன் 1:116:16ம் வசனம் மாற்றுக்கண் பொருத்துவது பற்றி அஸ்வினி மகரிஷி அவர்கள் சிறப்பானார் என்று கூறப்பட்டு உள்ளது..கி.மு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண் மாற்று சிகிச்சை மற்றும் செயற்கை கால் பொருத்துவது பற்றிய குறிப்புக்கள் நம் வேதங்களில் இருப்பது வியப்பின் உச்சமே.....

இது போலவே இந்தியாவின் அறுவை சிகிச்சை முறை பல ஆண்டு பழமை வாய்ந்தது..
தர்மத்தின் பாதையில்(page)
கி.மு 500 ஆம் ஆண்டில் வாழ்ந்த சுஸ்ருதா என்ற இந்து மருத்துவரே உலகின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவர் ஆகும். அறுவை சிகிச்சையை விஷ்னுவின் மறுவடிவமாக கூறப்படும் தன்வந்திரியிடம் இருந்து பெற்றுக்கொண்டார் என சில ஏடுகள் கூருகின்றன.

ஆயுர்வேதம் குறித்தும் அறுவை சிகிச்சை குறித்தும் "சுருஷ்ருதா" என்னும் நூல் காலத்தை கடந்து இன்றும் உலகைன் நடமுறையில் பல மருத்த்வரின் கைகளில் இருப்பது புகழுக்கும் பெருமைக்கும் உரியது..

இன்றைக்கு 2513 வருடத்துக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நூலில்
அறுவை சிகிச்சையை அவர் எட்டு வகையாக பிரித்து உள்ளர்1.செத்யா -துண்டித்தல்
2.லேக்யா-பிரித்தல்
3.வேதியா-போதைப்பொருளை உடலில் இருந்து நீக்கல்
4.இஷ்யா-நோயின் மூலக்காரணத்தைக்கண்டறிய ரத்தக்கூழாய்களை ஆராய்தல்
5.அபர்வ கிரியா- தீமை விளைவிக்கும் பொருட்களின் உற்பத்தியை உடலிலிருந்து அழித்தல்
6.விஸ்ராதேவ்யா-உடலிலிருந்து தண்ணீரை நீக்கல்
7.சிவ்யா-தைத்தல்
8.எத்தியகிரிய-துளைகள் போட்டு அறுவை சிகிச்சை செய்வது

தர்மத்தின் பாதையில்(page)
மிகவும் வளர்ச்சி அடைந்த அறுவை சிகிச்சை முறை பற்றியும் சுஷ்ருதாமிதாவில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.மூக்கு காது போன்ற உருப்புகளை புனரமைப்பு செய்வதற்கான இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு உள்ளது.இவர் கண் அறுவை சிகிச்சையும் செய்து உள்லார்.சிசரியன் அறுவை சிகிச்சை பற்றிய குறிப்புக்கள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இந்திய தொன்மையான மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மட்டுமல்லாது இறந்தவர்களின் உடலை அறுத்து பார்த்து மனித உடல் கூறு இயலையும் அறிந்து உள்ளார்கள்.
தர்மத்தின் பாதையில்(page)
அறுத்துப்பார்த்து ஆராய்ச்சி செய்வதற்காக இறந்த உடல்களை பாதுகாத்து வைத்ததற்கான குறிப்புகளும் சுஷ்மிருதாவில் இருக்கின்றன.மேலும் தமது நூலில் 125 அறுவை சிகிச்சை கருவிகளை பற்றி சுஷ்மிருதா மிக மிக விரிவாக விபரிக்கின்றது..\

தனது மூளையில் ஏற்பட்ட கட்டியை நீக்க போஜராஜன் அறுவை அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கி.மு 927ஐ சேர்ந்த "போஜ பிரபந்தம்" என்னும் நூல் கூறுகின்றது.
தர்மத்தின் பாதையில்(page)
கௌதம புத்தரின் மருத்துவரான "தேவகரும்" பல அறுவை சிகிச்சைகள் செய்து இருக்கின்றார்.இதை புத்த மத நூல்கள் தெரிவிக்கின்றன.மூளையில் இருந்த கிருமிகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியதாக "வினாயபித்திகா" என்னும் நூல் கூறுகின்றது..

வைத்திய முறையில் அறுவை சிகிச்சையை கடைசியாகத்தான் ஆயுர்வேதம் கூறுகின்றது.குணப்படுத்துவதைக்காட்டிலும் நோய் வராமல் தடுத்து நிறுத்தும் முறையில்தான் ஆயுர்வேதம் அதிக கவனம் செலுத்துகின்றது...

இது போக நம்முன்னோர்கள் மூலிகைமருத்துவம் பற்றிய குறிபுக்களை ஆயிரக்கணக்கில் எழுதி வைத்து உள்ளனர்.

சரக சமீதா,அஸ்டாங்க இருதயா,பவபிரகாச சிஷ்ருத சமிதா போன்ற நூல்கள் தாவரங்களின்மருத்துவ இயல்புகள் பற்றி விபரிக்கின்றது.மேலை நாட்டவரும் மருத்துவத்தாவரங்களின் சக்தியை கண்டறிந்து அவற்றின் மீது மோகம் கொண்டு உள்ளனர்.அதன் விளைவாக ஆங்கிலேயர் ஆட்சியின் போது தஞ்சாவூர் நூலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் ஏடுகளை களவாடிச்சென்று சமஸ்கிருத அறிஞர்களின் உதவியுடன் மொழிபெயர்த்தனர் என்று ஒரு சில வெள்ளையர்களின் குறிப்புக்கள் கூறுகின்றன.


நம் முனோர்கள் நமக்காக தந்த அற்புத பொக்கிஷங்களை நாம் சுயநலத்திற்காகவும் பகுத்தறிவு என்னும் போலி வேசத்தாலும் வெள்ளையனிடமும் வேற்று சமுதாயத்திடமும் இழந்து விட்டு இன்று நிர்க்கதியான நிலையில் இருப்பது போல உணரவேண்டியதாய் உள்ளது..இனி மேலாவது நம் தர்ம வழியிலும் வேத பாதையிலும் வழிசெல்ல வேண்டியது நம் கடமை என்பதை உணர வேண்டியது கட்டாயம்.


****பகுதி 4 முடிவடைந்தது******


வேதம் கண்ட விஞ்ஞானமென்ற தொடரை நாம் பலரின் வேண்டுதலுக்கு இணங்கவே மிகுந்த சிரமத்தின் மத்தியிலும் பலரின் மொழிபெயர்ப்பு உதவிகளுடன் தொகுத்து வழங்குகின்றோம்..உங்கள் விமர்சனங்களையும் பகிர்வுகளையும் எங்களுக்கு தெரியத்தருமாறு பணிவன்புடனே கேட்டுக்கொள்கின்றோம்..

ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீ ராம் ஜெய்ஸ்ரீ ராம் ஜெய்ஸ்ரீ ராம்தர்மத்தின் பாதையில்(page)


வேதம் கண்ட விஞ்ஞானம் 03வேதம் கண்ட விஞ்ஞானம் பகுதி 2இனை தொடர்ந்து மூன்றாம் பாகத்தை எழுதுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.ஆதரவு தந்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் கூறி வரவேற்ற #தர்மத்தின் பாதையில் உள்ள பெருமக்களுக்கு வல்ல இறைவன் ஸ்ரீராம சந்திரமூர்த்தியின் அருள் ஆசி கிடைக்க பிரார்த்தித்து மூன்றாம் பாகத்தை எழுதுகின்றோம்
உண்மையில் இந்த மூன்றாம் பகுதியை எழுதும் போது நாங்களே மெய்சிலிர்த்து விட்டோம்..வேதங்களில் வேத காலத்தில் இப்படியாக விஞ்ஞானத்ஹை எப்படி சொன்னார்கள் என்பது தெரியாமல்..அவ்வளவு பெறுமதியான சொற்கள்.

பகுதி 02ஐ ப்படிக்க இந்த தொடுப்பை அழுத்துங்கள்
http://goo.gl/S2MGG

புவியீர்ப்பு விசை,மற்றும் பூமியின் அமைப்பு,பூமி சூரியனை சுற்றும் காலம்,சூரிய சந்திர கிரகணம் என்பவற்றை வெளிப்படுத்திய சனாதன தர்மம் மற்றும் பாரத தேச முன்னோர்களின் பெருமை பற்றி கடந்த பதிவுகளில் மீட்டுப்பார்த்தோம்.அதே வழியில் இன்றைய பதிவில் பூமி சூரியனை சுற்றும் என்பதையும் அதைவிட அவற்றின் இயக்கம் பற்றி பூரணமான விளக்கத்தை கொடுத்த ரிக் மற்றும் சதுர் வேதங்கள் பற்றிய சிறு தகவலை பதிவாக்குகின்றோம்.

நமது கல்வியறிவின் படி நமது சூரிய மண்டலத்தில் சூரியனை மையமாக வைத்தே பூமி உட்பட கோள்கள் சுற்றுவதாக சொல்லியது கொப்பநிக்கல்ஸ் மற்றும் கலிலியோ.1453இல் இது தொடர்பான விசயங்கள் பரவலாக பேசப்பட்டது.ஆனால் அவைகள் கிருஸ்தவ மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று கருதியதால் கொப்பநிக்கல்ஸின் கருத்து முதலில் உதாசீனப்படுத்தப்பட்டு பின்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.,,ஆனால் இதெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே எமது வேதங்களிலும் புராணங்களிலும் தெட்டத்தெளிவாக கூறப்பட்டுள்ளது என்பது ஆச்சரியத்தின் உச்சம்..
தர்மத்தின் பாதையில் (page)

நமது தொகுதியின் மையமாக சூரியனே இருப்பதாக எமது வேதங்கள் தெளிவாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொலி விட்டது என்பது வியப்பின் உச்சம்..

இதை குறித்து கூறும் வேத சுலோகங்களை பார்க்கலாம்

01.மித்ரோ ததாரா ப்ரதவி முட்டாத்யம் மித்ர க்ரிஷ்டிஸ் (ரிக் வேதம் 3:55:91)

இதன் பொருள்: தனது ஈர்ப்பு சக்தியால் சூரியன் பூமியையும் வேறு கோள்களையும் தாங்கிப்பிடித்த வண்ணம் உள்ளது.

02.த்ரின பிகா க்ரமஜார்மனர்வம் யெனிமா விஸ்வ பூவா னானி டஸ்தூ(ரிக்வேதம் 1:16:41)

இதன் பொருள் எல்லா கிரகங்களும் விடுவதை கொண்ட ஓர் சுற்றுவட்டத்தில் சுற்றுகின்றன *தர்மத்தின் பாதையில் (page)

03.அயம் கவ் பிர்ஸ்னிரக்ராமிட் அசடன்மட்டராம் புரா பிடரம் க பிரயந்ஸ்வா (ரிக்வேதம் 10:16:91)

இதன் பொருள் சந்திரன் பூமிக்கு துணைக்கோள்.பூமியானது தாய்க்கிரகமான சந்திரனையும் தந்தைகிரகமான சூரியனையும் சுற்றி வருகின்றது.

இங்கு தாய் தந்தை எனக்குறிப்பிடப்பட்டு உள்ளமை இந்து த்ர்மத்தில் உலகின் தந்தை அதாவது உலகிற்கான பிரகாசம் கொடுக்கும் தந்தை சூரியன் எனவும் தாய் சந்திரன் எனவும் கூறப்படுவதுண்டு.ஜோதிடக்கலையில் கூட அவதானிக்கலாம்.*தர்மத்தின் பாதையில் (page)

இதை விட ரிக் வேதத்தின் 10.22.14 பின்வருமாரு கூறுகின்றது
கரங்களும், கால்களும் அற்ற இந்த புவி, நகர்ந்து கொண்டே இருக்கிறது, புவியில் உள்ள பொருள்களும் அவ்வாறே நகர்ந்து கொண்டே இருக்கிறது (கப்பல் செல்லும் போது அதில் உள்ள பயணிகளும் அதனுடன் செல்வது போல்). இவை அனைத்தும் ஒருசேர ஆதவனை சுற்றி வருகிறது

இதைப்போலவே மேலும் பல வசனங்கல் சூரியன் மற்றும் பூமியின் இயக்கம் பற்றி கூறுகின்றது

ரிக் வேதம் 10.149.1
சூரிய இயக்கத்தையும் கோள் இயக்கத்தையும் ஒரு குதிரையின் செயலுடன் ஒப்பிட்டு அற்புதமான விளக்கத்தை தருகின்றது.
அதாவது
எப்படி ஒரு குதிரை பயிற்றுவன் தன் பயிற்றுவிக்கும் குதிரையை கயிற்றில் கட்டி தன்னை சுற்றி வர பயிற்றுவிக்கிரானோ அப்படியே சூரியனானவன் தன் ஈர்ப்பு விசையால் மற்ற கிரகங்களை தான்னை சுற்றி வர செய்கிறது.

இதெபோல ரிக் வேதம் 1.164.13 இல் சூரிய இயக்கம் பற்றி அழகாக கூறப்பட்டு உள்ளது.

சூரியன் தனது சுற்றுப் பாதையில் தனக்குத் தானே சுற்றி வருகிறது. புவியீர்ப்பு விசை காரணமாகவும் மற்ற கோள்களைவிட சூரியனின் எடை அதிகமாக இருப்பதால், பூமியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன.*தர்மத்தின் பாதையில் (page)

இதே போல சூரியன் மறைவதும் இல்லை உதிப்பதும் இல்லை என் அளப்பெரிய அறிவியலை நம் வேதங்கள் அன்றே கூறிவிட்டன.அதாவது சூரியன் மறைவதோ உதிப்பதோ இல்லை..அவைகள் பூமி சுற்றிவருவதால் மறைதல் உதித்தல் போன்ற தோற்றம் தெரிகிறது.ஆனால் உண்மையில் அவைகள் மறைவதோ உதிப்பதோ இல்லை.

சூரியன் மறைவதோ உதிப்பதோ இல்லை(ரிக்வேதம் அய்ரேய பிரமம்)

இந்த நிகழ்வை "லகு குருநியாய" என்னும் அறிவு பூர்வமான கோட்பாட்டின் மூலம் ஆரியப்பட்டர் தெளிவாக விளக்கி உள்ளார்.லகு என்றால் சிறிய அல்லது கனமற்ற பொருள் என்று அர்த்தம்.குரு என்றால் பெரிய அல்லது கனமான பொருள் என்பது அர்த்தம்.சிறிய பொருள் பெரிய பொருளை சுற்றி வருவதாக இந்த கோர்பாட்டின் மூலம் அவர் கூறியுள்ளார்.சூரியனிடமிருந்தே சந்திரன் ஒளியை பெற்று பிரகாசிக்கின்றது என்ரும் அவர் தெரிவித்துள்ளார் என்பதேஉச்ச கட்ட வியப்பு.காரணம் இவைகள் 20 நூற்றாண்டின் விஞ்ஞான மகத்துவமான கண்டு பிடிப்புக்கள்..எந்த வித வசதியுமற்ற அக்காலத்தில் ஒரு சாதாரண மனிதனால் இதை வெளிக்கொண்ர முடியாது என்பது வெளிப்படை.ஆக தெய்வாதீன சக்தியே இவர்களின் இந்த கண்டு பிடிப்புக்கு உறுதுணை என்பதில் ஐயமே இல்லை.

அது போக சூரியனை பூமி சுற்ற எடுக்கும் காலத்தை மிகத்திருத்தமாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கணித்தவரும் பூமி தன்னைத்தனே சுற்றும் காலத்தை துணிந்தவரும் இவரேதான்.(ஆர்யப்பட்டா)

அது போக கிரகங்கள் என்பதன் சமஸ்கிருத அர்த்தமே கவரப்படக்கூடியது என்பதுதான்..எல்லா கிரகங்களுக்கும் பொதுவாக அகவரும் ஆற்றல் உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும்.

அடுத்து சூரியனின் ஒளியைத்தான் சந்திரன் பெறுகின்றது என்றும் சந்திரனுக்கு சுயமாக ஒளி இல்லை எனவும் பல வேத சுலோகங்கள் வெளிப்படையாக கூருகின்றது

ரிக் வேதம் 1.84.15

சூரியனிடமிருந்தே சந்திரன் தனக்கு தேவையான ஒளியை பெற்றுக்கொள்கின்றான்

ரிக் வேதம் 10.85.9 இல் சூரியன் தனது பிள்ளையான சூரிய கதிர்களை தனது மனைவி சந்திரனுக்கு வழங்குகின்றான் என உவமையாக சூரியனிடமிருந்தே சந்திரனுக்கு ஒளி கிடைப்பதாக கூறுகின்றது

இத்தகைய விஞ்ஞான பெரும்பொக்கிஷத்தை இந்துக்களாக இருந்தும் இதுவரை எங்களால் படித்து உணர்ந்து நம் பெருமைகளை மார்தட்டி வெளியே சொல்ல முடிவதில்லை.அதற்கு சமஸ்கிருத அறிவின்மை,அந்நிய படையெடுப்பு ,பகுத்தறிவு என்ற போர்வை என்பனவும் ஒரு காரணமே..உண்மை இந்து இந்தியன் தமிழன் என்ரு பல பல பல பெருமையான கோபுரங்களின் மீது நிற்க பெருமைப்படவேண்டியவர்கள் நாங்கள்.இந்த பெருமைகளையும் உண்மைகளையும் அரியமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்லோம் என்பது வருந்தவேண்டிய விடயம்.

உங்களின் ஆதரவை தெரிவியுங்கள்.உங்கள் விமர்சனங்கள் வரவேற்கத்தக்கது

நன்றி
ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்


வேதம் கண்ட விஞ்ஞானம் 2வேதம் கண்ட விஞ்ஞானம் பகுதி 01 இற்கு ஆதரவு த்ந்த அனைத்து நண்பர்களுக்கும் ஸ்ரீராம சந்திர மூர்த்தியின் பரிபூரண அருள்கடாட்சம் கிடைக்க இறைவேண்டுதலுடன் இரண்டாம் பாகத்தை எழுதுகின்றோம்.

முதலாம பதிவை படிக்க 

http://goo.gl/RYyJv

புவியீர்ப்பு விதி என்றவுடன் நம் எல்லோரின் நினைவுக்கு வருவது சேர்.ஐசக் நியூட்டனும் ஆப்பிள் பழமும் மட்டுமே.காரணம் ஈர்ப்பு விதியை ஐசக் நியூட்டன் கண்டறிந்து உலகறியச்செய்தார் என்பதே வரலாறு..ஆனால் மறைக்கப்பட்ட அல்லது மறைந்து போன இந்திய அறிவியலாளர்களும் இந்திய அறிவியலும் ஏராளம்.காரணம் எம்மீது திணிக்கப்பட்ட அந்திய ஆக்கிரமிப்புக்களும் பகுத்தறிவு என்றபெயரில் மழுங்கடிக்கப்பட்ட எங்களின் வேத,புராணங்களுமேயாகும்.காலம் கடந்து இப்படியான சமூக வலைத்தளங்களின் மூலம் அறிந்து கொள்ள வேண்டிய சூழ் நிலையில் நாம் உள்ளோம் என்பது வருந்தத்தக்க விடயமாகும்.

சரி இனி விடயத்திற்கு வருவோம்.புவியீர்ப்பு விசை பற்றி முதலில் கூறியது.ஐசக் நியூற்றன் அல்ல.இந்திய புராணங்களிலும் வேதங்களிலும் ,பண்டைய காலத்திலும் இது பற்றி தெட்டத்தெளிவாக கூறிவிட்டனர்.

இனி வேதம் மற்றும் நம் முன்னோர்களின் அறிவியல் சார் செய்யுள்களை பார்க்கலாம்...*தர்மத்தின் பாதையில்(page)

பாஸ்கர ஆச்சார்ய என்னும் கணிதமேதை சித்தாந்த சிரோன்மனி என்னும் தனது நூலில்

"அக்ரஸ்டா சக்திஸ்கா தய ஸ்வாஸ்தம்
குரு ஸ்வபிமுகம் ஸ்வஸ்தியா
அக்ரசியாதே தத்பததிவ பதிசமே
சமன்தாத் க்வ பதத்வியாம் சே
"

இதன் பொருள் நவீன விஞ்ஞானங்கள் கூறுவதை அப்படியே கூறி எல்லோரையும் வியப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்லும்.
இதன் பொருள் இதுதான் *தர்மத்தின் பாதையில்(page)
இயற்கையாகவே வானில் உள்ல பொருட்களை தன்னை நோக்கி கவரும் தன்மை கொண்டது பூமி.இத்தகைய ஈர்ப்பு சக்தியினால் எல்லா பொருட்களும் பூமியில் விழுகின்றன.கிரகங்களுக்கு இடையில் சமனான ஈர்ப்பு சக்தி இருக்கும் போது எப்படி விழும் என்று கூறுகின்றனர்.
சூரிய் சித்தாந்தம் புவியீர்ப்பு பற்றி இப்படி கூறுகின்றது

"மத்யே சமந்தாந்தஸ்ய பூகோள வியாமினி திஸ்தாதி
பிப்ஹாரனா பரமம் சஹ்தீம் பிரம்மனோதரனாத்மிகம்"(சூர்யசித்தாந்தம்
அத்தியாயம் 12 சுலோகம் 32)

அதாவது பூமியில் தரனாத்மிகா என்னும் சக்தி உண்டு என்பதாக கூறியுள்ளனர்.அதுவே ஈர்ப்பு சக்தி தர்மத்தின் பாதையில்(page)

அத்துடன் 11ம் நூற்றாண்டில் பாஸ்கராச்சாரியர் என்பவர் தனது லீலாவத் என்னும் புத்தகத்தில் பூமியானது குருத்கவர்சனா சக்தி(புவியீர்ப்பு சக்தி)
கொண்டது.கிரகங்களுக்கு இடையில் ஈர்ப்பு சக்தி உண்டு எனவும் அதனாலேயே அவைகள் கவரப்பட்டு அண்டத்தில் உறுதியாக உள்ளது என்று கூறப்பட்டு உள்ளது. என்று கூறியுள்ளார்.

இத்துடன் 7ம் நூற்றாண்டை சேர்ந்த சந்திரகுப்தா என்ற புகழ் பெற்ற கணிதவியல் அறிஞர் தனது "பிரம்ம புட்டா சித்தாந்தம்" என்ற கணிதவியல் நூலில் பின்வருமாறு கூறி வியப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறார்.

தண்ணீர் இயற்கையாகவே கீழ் நோக்கி செல்லும் தன்மை கொண்டது..ஏனெனின் பூமிக்கு அவ்வாறான கவரும் ஈர்ப்பு சக்தி சக்தி கொண்டது.அதனாலே பூமியில் எல்லா பொருட்களும் கீழே விழுகின்றன" என்று கூறி தற்கால விஞ்ஞானங்களை அப்போதே தெட்டத்தெளிவாக கூரியுள்ளார்.#தர்மத்தின்பாதையில்(page)

இது போக பிரசன்ன உபநிடதத்திற்கு விளக்கவுரை எழுதிய அதிசங்கரன் பின்வருமாறு கூறுகின்றார்.
ததா பிரிதிவியமாபிமனினி யா தேவதா
பிரசித்தா சைசா
பிருசாஸ்ய அபனா பிர்த்திமவஸ்தபியா
க்ர்ஸ்யா வசிக்ரித்யாய ஈவா
அபகர்சேனா அனுகிரகம் குர்வதி
வர்த்தாத்த இத்யார்தா
எனியாதா ஹி சரிரம் குருத்துவபரித்
சவகசி வோட்கசித்
"
இதன் பொருள் என்னவெனின் " மேலே எறியப்படும் பொருட்கள் பூமியால் கவர்ந்திழுக்கப்படுவது போலே உடம்பிலே இருக்கும் உயர்ந்த பிராண சக்தியை அவனா சக்தி இழுக்கின்றது என்று உவமையில் ஈர்ப்பு சக்தியை சாதாரணமாக கூருகிறார்.

பொதுவாக உவமை என்பது ஒரு தெரிந்த விஷயத்தை வைத்து தெரியாத விடயத்தை விளக்குவது ஆகும்..ஆக பூமியின் ஈர்ப்பு விதி அக்காலத்தில் அவ்வளவு தெளிவாக எல்லோரின் தெளிவுடன் நடைமுறையில் இருந்துள்ளது என்பதை பார்க்கும் போது பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடிவதில்லை

தர்மத்தின் பாதையில்(page) பக்கத்தில் தொடர்ச்சியாக இந்த பதிவை எழுத திட்டமிட்டு இருந்தோம்.ஆனால் பெரிய கட்டுரைகளை படிக்க பெரும்பாலானோர் விரும்பாத காரணத்தால் கட்டுரையை சிறு சிறு பதிகளாக பிரித்து தொகுத்து வழங்குகின்றோம்.இது வாசகர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்கின்றோம்.
உங்கள் விமர்சனங்களை கட்டயம் பதிவிலோ தனிப்பட்ட செய்தியிலோ தெரிவியுங்கள்

ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்


Tuesday, August 30, 2016

வேதம் கண்ட விஞ்ஞானம்- 01


சனாதன தர்மம் என்பது தத்துவங்களாலுல் மனோவியலாலும் அறிவியலாலும் உருவாகிய கோட்டை..வேதங்கள் புராணங்கள் செய்யுள்கள் இலக்கியங்கள நீதிநூல்கள். மற்றும் சாஸ்திரங்கள் என இந்துமதத்தின் சொத்துக்கள் ஏராளம்...காதல்,நட்பு,காமம் என இந்து தர்மம் என இந்து தர்மம் கை வைக்காத துறையோ விடயமோ இல்லை..அத்தனையும் வாழ்க்கைக்கு ஏதுவான அஸ்திவார திரட்டுக்கள்..அந்த வகையில் வேதம் கண்ட விஞ்ஞானம் என்னும் இத்தொடரை தர்மத்தின் பாதையில் உங்களுக்கு தொகுத்து வழங்க கடமை பட்டு உள்ளது..அந்த வழியில் இத்தொடரின் முதலாவது பதிவை வானியல் என்னும் தலைப்பில் தருகின்றோம்

பூமியின் வடிவம் பற்றி ப்ல காலமாக பலதரப்பட்ட இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் சச்சரவுகளும் பிழையான கருத்து பரிமாறல்களுமிருந்து வந்துள்ளன...முடிவில் 18 மற்றும் 19 நூற்றாண்டளவுகளிலேயே இதற்கான விடையை விஞ்ஞானம் கண்டு பிடித்தது..அதாவது பூமியானது கோளம் என்றும் அது தன் பாதையில் உறுதியாக உள்ளது என்றும்...இது விஞ்ஞானம் .ஆனால் இதே கருத்தை நம் இந்து முன்னோரான பாஸ்கர ஆச்சார்யா ஏற்கனவே தனது நூலில் தெட்டத்தெளிவக கூறிவிட்டார் என்பது ஆச்சரியமே

11ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாஸ்கர ஆச்சார்யா லீலாமத் என்னும் புத்தகத்தில் லீலாவதி என்ற சிறுமி கேட்ட கேள்விக்கு பின்வருமாறு பதில் கொடுக்கிறார்.

“உனது கண்கள் எதை பார்க்கின்றதோ அவை யாவும் உண்மை அல்ல..நீ பார்ப்பது போல பூமி தட்டையானது அல்ல.அது கோளவடிவமானது.ஒரு பெரிய வட்டத்தை வரைந்துவிட்டு அதன் சுற்றளவில் நான்கில் ஒரு பங்கில் தூரத்தில் நின்று பர்த்தால் அது நேர்கோடகவே தெரியும்.அது போலவே பூமியும் தட்டையானது அல்ல.அது கோளமானது"

இதே போல 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த் ஆர்யப்பட்டர் எழுதிய ஆர்யப்பட்டம் என்ற நூல் லத்தின் மொழியில்  பாதையில்(page)# பெயர்க்கப்பட்டது.மேலை நாட்டு வனியலாளர்களை தூக்கிப்போட்ட நூல் இது.கிரகணத்துக்கான காரணத்தை ஆர்யப்பட்டர் தனது நூலில் தெளிவின் மேல் தெளிவாக விளக்கி இருந்தார்.

"சடயாட்டி சசி சூர்யம் சகினாம் மகதிக பூசார்ய..........................."
நூல் ஆர்யப்பட்டம் கோல் பாதம் சுலோகம் 39

இதன் பொருள்:சூரியன் சந்திரனை மறைக்கும் போது சூரிய கிரகணம் தோன்றுகின்றது..பூமி சந்திரனை மறைக்கும் போது சந்திரகிரகணம் தோன்றுகின்றது..தர்மத்தின் பாதையில்(page)
மேலும் அவர் கிரகணங்கள் எப்போதெல்லாம் தோன்றும் என்றும் பூமி சூரியனை சுற்ற 365 நாட்கள் 12 மணித்தியாலங்கல் 30 வினாடிகள் செல்லும் என்றும் பூமி தன்னத்தானே சுற்ற 23 மணித்தியாலங்கள் 56 நிமிடம் 4.1 வினாடி செல்லும் எனவும் அப்போதே துள்ளியமாக கூறிவிட்டார்.என்பது ஆச்சரியமான தகவல்தான்.தர்மத்தின் பாதையில்(page)

அத்துடன் இந்திய மொழியில் ஜாக்ரபி என்பது பூகோளசாஸ்திரம் என்பது பொருள்.பூகோளம் என்பதிலிருந்தே பூமி கோளவடிவம் என்பதை நம் முன்னோர்கள் கூறிவிட்டனர்.

இவற்றை பார்க்கும் போது நமக்கும் இந்து அல்லது இந்தியன் என்ற இறுமாப்பும் கர்வமும் ஏற்படுகின்றதல்லவா??????????????தர்மத்தின் பாதையில்(page)

வாசிப்போருக்குகாக சிறிது சிறிதாக பாகம் பாகமாக எழுதுகின்றோம்
அடுத்த பதிப்பில் நியூற்றன் விதியை கண்டது யார்??????? என்ற தலைப்பில் ஒலிக்கும்.....

ஜெய் ஸ்ரீராம்